பதிவு:2025-03-11 11:08:28
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை திமுக அரசு தடுக்க தவறியதாக கூறி திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் மார்ச் 10 : தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவருக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், ஆளும் திமுக அரசு அதனை தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை திமுக அரசு தடுக்க தவறை தாகம் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்; தண்டனைகளை அதிகப்படுத்த வேண்டும்; பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் மகளிரணியினர் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோஷம் எழுப்பிய போது. அசிங்கமான வார்த்தையை சொல்லி கோஷம் எழுப்பியதால் அங்கிருந்த பெண்கள் முகம் சுளித்தனர்.