கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்கும் வீடியோ வைரல் :

பதிவு:2025-03-11 11:10:24



கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்கும் வீடியோ வைரல் :

கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்கும் வீடியோ வைரல் :

திருவள்ளூர் மார்ச் 10 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொசவன்பாளையம் கிராமத்தில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் சீருடை உடன் செங்கற்களை சுமந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவகாரம் குறித்து அப்பகுதி மக்கள் கேட்ட போது முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் தன்மையாக நடந்து கொள்வதில்லை.

மாணவர்களை தரக்குறைவாக பேசுவதும் மேலும் இன்றைய தினத்தில் பள்ளியில் இருந்த செங்கற்களை பள்ளி சிறுவர்களை வைத்து சுமக்க செய்தது குறித்து கேள்வி கேட்டால் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு நீங்கள் செல்லுமாறு பொறுப்பற்ற முறையில் பதில் கூறுவதாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.