திருவள்ளூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு (ஒய்வு) “மனப்பாடம் எனும் மாயை” என்ற தலைப்பில் கருத்துரை :

பதிவு:2025-03-11 11:13:49



திருவள்ளூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு (ஒய்வு) “மனப்பாடம் எனும் மாயை” என்ற தலைப்பில் கருத்துரை :

திருவள்ளூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு (ஒய்வு) “மனப்பாடம் எனும் மாயை” என்ற தலைப்பில் கருத்துரை :

திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்வாக சிந்தனை அரங்கத்தில் எழுத்தாளர் எஸ்.பாலபாரதி அவர்களின் “பால்யத்தில் கதைகள்“ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை என்ற நிகழ்ச்சியும், வெ.இறையன்பு (ஒய்வு) அவர்களின் “மனப்பாடம் எனும் மாயை” என்ற தலைப்பில் கருத்துரையும், எழுத்தாளர் இமையம் அவர்களின் “தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியும், ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் 115 புத்தக மற்றும் பிற துறைகளில் அரங்குகள் கொண்ட திருவள்ளூர் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை சி.வி. நாயுடு சாலை பகுதியில் அமைந்துள்ள பொருட்காட்சித் திடலில் துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார்.

முன்னதாக தினந்தோறும் மாலை பள்ளி? கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தினந்தோறும் சிந்தனை அரங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக எழுத்தாளர் சாந்தகுமாரி எத்துராசன் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கௌரவிக்கபடுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உதவி மையம். 1. பார்வை திறன் குறையுடோருக்க உருப்பெருக்கி சாதனம். 2. இயக்கத் திறன் குறைவுள்ளவர்களுக்கு – சக்கர நாற்காலி வசதி 3. காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு – சைகை மொழி பெயர்ப்பாளர் உதவி நூல்கள் எல்லோருக்குமானது! அனைவரும் எந்தத் தடையுமின்றி புத்தக உலகை அனுபவிக்க அழைக்கிறோம்

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் எஸ்.பாலபாரதி, வெ.இறையன்பு (ஒய்வு), எழுத்தாளர் இமையம் ஆகியோர்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி சிறப்பு செய்தார்கள்

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார்,மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வமதி உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் , மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் சங்கிலிரதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.