பதிவு:2025-04-03 17:05:33
செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பால பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 03 : திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கடவு எண் 13, 14, 15 மேம்பாலம் அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலை (கட்டுமானம்) மற்றும் பராமரிப்பு துறை சார்பில் ரூ. 17.50 கோடி மதிப்பீட்டில் போந்தவாக்கம் – ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை (2.6 கி.மீ) சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கடவுஎண் 13, 14, 15 நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு பாலம் அமைப்பதற்கான தூண்கள் பணிகள், பணிகளில் முன்னேற்றம் குறித்தும், தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) அலுவலர்களிடம் விரிவுபடுத்தும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு விவரங்கள் குறித்தும், பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், நெடுஞ்சாலை (கட்டுமானம்) மற்றும் பராமரிப்பு துறை சார்பில் ரூ. 17.50 கோடி மதிப்பீட்டில் போந்தவாக்கம் – ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை (2.6 கி.மீ) சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், கச்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வருகை பதிவேடு , மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவ பணிகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் நெடுஞ்சாலைத்துறை திருவள்ளூர் உதவி கோட்டப் பொறியாளர் தஸ்நேவிஸ் பர்னாண்டோ , தனி வட்டாட்சியர் (நில எடுப்பு ) ப்ரீத்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.