பதிவு:2025-04-03 17:07:56
ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில் திறன் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சிக்கு பழங்குடியினர் பெண்கள் செல்லும் வாகனம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழியனுப்பி வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 03 : திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சென்னை தரமணி கல்லூரி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி சென்னை இணைந்து நடத்தும் தொல்குடி தொடுவானம் திட்டத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பழங்குடியினர் பெண்களுக்கான தொழில் திறன் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியில் கலந்து கொள்ளும் பழங்குடியினர் பெண்கள் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து வழியனுப்பி வைத்து பேசினார்.
சென்னை தரமணி கல்லூரி வளாகத்தில் தொல்குடி தொடுவானம் திட்டத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பழங்குடியினர் பெண்களுக்கான தொழில் திறன் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 30 பழங்குடியினர்கள், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 05 பழங்குடியினர்கள் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 15 பழங்குடியின மக்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இப்பயிற்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ப.செல்வராணி, கண்காணிப்பாளர் செல்வநாயகம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.