பதிவு:2022-06-11 12:29:56
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தொடரில் தீடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் பெண் கவுன்சிலர்கள் புடவை, முந்தானை,தீர்மான நகலை கொண்டு விசிறியும் அவதியுற்றனர்
திருவள்ளூர் ஜூன் 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வெட்டு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய குழு தலைவர் (அதிமுக) வெங்கட்ரமண தலைமையில் நடைபெற்றது, 3 மணிக்கு ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த நிலையில் 4 மணிக்குப் பிறகே கூட்டம் தொடங்கியது. அப்போது அதிமுக கவுன்சிலர் விஜி என்பவர் பேசிக் கொண்டிருந்தார்.
அதாவது, பூண்டி ஒன்றியத்தில் அனுமதியின்றி தொழிற்சாலைகள் செயல்படுவதாகவும்,அது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலைப் பெற்று கடந்த கூட்டத்தில் விவாதித்த போது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டதால் கவுன்சிலர்கள் அவதியுற்றனர், பெண் கவுன்சிலர்கள் புடவை முந்தானை கொண்டும், ஒன்றிய தீர்மான நகலை வைத்துக்கொண்டு விசிறி கொண்டனர்.
இதனால் சுமார் அரைமணிநேரம் கூட்டத்தில் அவதி ஏற்பட்டது. தமிழக முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வந்திருக்கும் நிலையில் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் மன்ற உறுப்பினர்கள் அவதியுற்று அங்கு அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.