பதிவு:2025-04-03 17:10:19
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆரணி, திருமழிசை பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் ஏப் 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆரணி, திருமழிசை பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் ஆரணி மற்றும் திருமழிசை பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் . மேலும் கோடை காலம் என்பதால் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் மற்றும் வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பது குறித்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இதில் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.