பதிவு:2025-04-03 17:12:52
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கருத்துரை :
திருவள்ளூர் ஏப் 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கருத்துரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் பணி மேற்கொள்ள வேண்டும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிவுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் திருவள்ளூர் சுகாதார அலுவலர் பிரியா ராஜ் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.