பதிவு:2025-04-10 10:12:27
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஊராட்சி பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 10 : திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அதே பகுதியில் ரூ. 22 இலட்சம் மதிப்பீட்டில் கிளை நூலக கட்டடத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டும் , அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு செயல்திட்ட பணிகள் மற்றும் மருத்துவப் பணிகள், மருத்துவர்களின் வருகை பதிவேடு, மருந்தகம் பதிவேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோணசமுத்திரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வரும் திட்ட ப்பணிகள் குறித்தும், கொடி வலசா ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.47 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ரூ.2.17 இலட்சம் மதிப்பீட்டில் 3500 மரக்கன்றுகள் அலகு அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தின் திட்டப்பணிகள் குறித்தும், நெடியும் ஊராட்சி இருளர் காலனிகள் 15 வது நிதிக்குழு மானியத்தில் ரூ.3.50 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் கட்டும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட பொதட்டூர்பேட்டை நாகாளம்மன் கோவில் தெரு, ஈச்சம்பாடி அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் நகர், ஊரக, பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பேரூராட்சி செயற்பொறியாளர் சரவணன் உதவி செயற்பொறியாளர். கோமதி, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அற்புதராஜ், அருள், பொதட்டூர்பேட்டை செயல் அலுவலர் ராஜ்குமார், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.