பதிவு:2025-04-10 10:14:16
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 10 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்து பார்வையிட்டு பேசினார்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆவின் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அமர்ந்து ஆவின் உணவு பொருட்களை நவீனமான முறையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் . ஆவின் உணவு பொருட்களை விடுதியில் தங்கும் மாணவர்கள் வாங்கும் வகையில் கல்லூரி முதல்வர் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, ஆவின் பொது மேலாளர் நாகராஜன், துணை முதல்வர் திலகவதி மற்றும் ஆவின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.