திருவள்ளூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் :

பதிவு:2025-04-10 10:16:13



திருவள்ளூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் :

திருவள்ளூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் :

திருவள்ளூர் ஏப் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் மற்றும் மதிய உணவு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் பதிவிடுவது குறித்தும், மாணவர்களின் எண்ணிக்கைகளை குறையாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் அவ்வப்போது காலை உணவு திட்டம் வழங்கப்படும் மையத்தினை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கையினை மேம்படுத்தவும் மாணவர்களின் சதவீதத்தை உயர்த்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகளை மாநகராட்சி நகராட்சி ஊராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் காலை உணவு திட்டப் பணிகளில் சிறப்பான முறையில் செயல்படுத்தவதை பின்பற்றி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுவையாகவும் தரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் .வாரந்தோறும் மகளிர் திட்ட அலுவலர்கள் காலை உணவு திட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தி காலை உணவு திட்ட பணிகளில் எவ்வித தொய்வு இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பஞ்சு, உதவி இயக்குநர் ஊராட்சிகள் யுவராஜ், மற்றும் அரசு அலுவலர்களுக்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.