திருத்தணி மலை கோயில் வளாகத்தில் பக்தர் ஒருவர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகள் : திருவள்ளூர் எஸ்.பி.சீனிவாச பெருமாள் தங்கம், பரிசுகள் வழங்கி பாராட்டு :

பதிவு:2025-04-10 10:18:56



திருத்தணி மலை கோயில் வளாகத்தில் பக்தர் ஒருவர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகள் : திருவள்ளூர் எஸ்.பி.சீனிவாச பெருமாள் தங்கம், பரிசுகள் வழங்கி பாராட்டு :

திருத்தணி மலை கோயில் வளாகத்தில் பக்தர் ஒருவர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகள் : திருவள்ளூர் எஸ்.பி.சீனிவாச பெருமாள் தங்கம், பரிசுகள் வழங்கி பாராட்டு :

திருவள்ளூர் ஏப் 10 : திருத்தணி மலைக்கோவிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய கடந்த 7-ஆம் தேதி சுமார் 12 மணியளவில் சென்னை வியாசர்பாடி ஜவஹர் நகரை சேர்ந்த சேர்ந்த கௌதம் (33) ஐ.டி.ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இந்நிலையில் தரிசனம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டு செல்ல வாகனம் நிறுத்திமிடத்திற்கு வந்துள்ளார். அப்போது, கையில் அணிந்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இரண்டரை சவரன் நகை தவற விட்டது தெரியவந்தது.

அதையடுத்து உடனே திருத்தணி மலை கோயில் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதே நேரத்தில் ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து ஆற்காடுகுப்பம் அருகே குடும்பத்துடன் வந்து நாடோடிகளாக தங்கி ஈச்சம் மர இலையில் துடைப்பம் மற்றும் ஒட்டடை குச்சி ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகின்ற நாகேந்திரன் மற்றும் வெங்கடலட்சுமி ஆகிய தம்பதியரின் மகள்களான பவித்ரா (12) மற்றும் ரேணுகா (7) என்ற சகோதரிகள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் அந்த நகை அதை எடுத்துக் கொண்டு மலை கோயில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதே சமயம் மேற்படி நகையை தவற விட்ட கௌதமும் திருத்தணி மலை கோயில் புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்துள்ளார். எனவே, தொலைந்த நகை குறித்த விவரத்தை காவல் துறையினர் முறையாக விசாரித்து, தங்க கை காப்பு உரிமையாளரான கௌதமிடம் ஒப்படைத்துள்ளனர்.

வறுமையின் பிடியில் இருந்தாலும், தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த உயர்ந்த பண்பையும், நேர்மையாக இந்த நற்செயலை செய்த சிறுமிகள் பவித்ரா மற்றும் ரேணுகா ஆகியோரை பாராட்டும் விதமாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, பதக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார்.

அப்போது, தங்களது பெற்றோர்கள் யார் பொருள் மீதும் ஆசை படக்கூடாது என குறிப்பிட்டுள்ளதால் கீழே கிடந்த நகையை போலீசாரிடம் ஒப்படைத்தோம். கோணலம் அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், நான் மருத்துவராக படிக்க விரும்புவதாகவும் சிறுமி பவித்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை பூர்வீகம் கொண்ட தங்கள் 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியில் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கி கிராமங்களில் சிக்கு முடி வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அதனால் தங்களுக்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்து வீடு வழங்கவும் என சிறுமிகள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது, உங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்றனர்.