திருவள்ளூரில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பேரணி : மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தொடங்கி வைத்தார் :

பதிவு:2025-04-10 10:20:59



திருவள்ளூரில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பேரணி : மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தொடங்கி வைத்தார் :

திருவள்ளூரில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பேரணி : மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் ஏப் 10 : நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மாவட்ட மற்றும் வட்ட அளவில் சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சட்டப்பூர்வமாக வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமுகத் தீர்வு காணப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீர்வு மையம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்.9 இல் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்டத்தில் சமரச தீர்வு மையங்களும், 146 வட்ட அளவிலான சமரச மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் சமரச தீர்வு மையம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமரச தீர்வு மையம் குறித்து கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமை தாங்கி சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி மற்றும் கலைநிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களுக்கு சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். இதில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.