பதிவு:2025-04-10 10:25:10
திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையில் கஞ்சா குடித்துக் கொண்டிருந்தவரிடம் எங்கே கஞ்சா கிடைக்கும் என இன்னொரு இளைஞர் கேட்டு ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து :
திருவள்ளூர் ஏப் 10 : திருவள்ளூர் நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுமணி(27). இவர் நகரின் முக்கிய சாலையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகம் செல்லும் சாலையும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆன பொதுமக்கள் அதிக அளவில் கூடும் காமராஜர் சிலை அருகே குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகவல்லிபுரத்தைச் சேர்ந்த சுனில்(29) என்பவரிடம் பொன்னுமணி ரூ.20 கடனாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதில் குடிபோதையில் இருந்த சுனிலிடம் பணம் பெற்ற பொன்னுமணி தான் பாக்கெட்டில் வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைக்க ஆரம்பித்தார். அப்போது அதைக் கண்ட சுனில் கஞ்சா எங்கு கிடைக்கும் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் கீழே விழுந்த சுனில் தான் வைத்திருந்த கத்தியால் பொன்னுமணியை கை மற்றும் கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார். அப்போது காமராஜர் அருகே உள்ள போலீஸ் பூத் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் பிரபாகர் மற்றும் போலீசார் சுனிலை கைது செய்தனர்.
மேலும் காயமடைந்த பொன்னுமணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் காமராஜர் சிலை அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மது கஞ்சா ஆகியவற்றால் இளைஞர்கள் சீரழிவதோடு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற கத்தியால் குத்தி அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவோரை கண்டு அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.