பதிவு:2025-04-10 10:26:39
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 10 : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகடாமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரிஎம்பிராய்டரி மற்றும் ஜவுளியில்கையால் அச்சியிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் ஆகும். மேலும் சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.