அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை :

பதிவு:2025-04-12 11:16:22

திருவள்ளூர் ஏப் 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அப்பொழுது ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்கள் உடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்கள் உடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

முன்னதாக அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்களது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையர் கலால் கணேசன், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் (பொது ) சங்கிலி ரதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.