பதிவு:2025-04-12 11:19:34
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது குறித்து அளவீட்டு முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டார் :
திருவள்ளூர் ஏப் 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,சென்னை ப்ரீடம் டிரஸ்ட் என்ற நிறுவனம் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவது குறித்து அளவீட்டு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சென்னை ப்ரீடம் டிரஸ்ட் என்ற நிறுவனம் கேட்டர்பில்லர் (CSR நிதியிலிருந்து) 10.04.2025 மற்றும் 11.04.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கால் மற்றும் கை, கார்னர் சேர், காலிப்பர், முடநீக்கு சாதனங்கள் போன்ற உபகரணம் வழங்கும் அளவீட்டு முகாம் நடைபெற்றது இம்முகாமில் சுமார் 520 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அதில் 490 பயனாளிகள் உபகரணங்கள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மூடநீக்கியல் அலுவலர் பிரித்தா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.