திருவள்ளூர் அடுத்த திரூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக கட்டாததால் பொதுமக்கள் அவதி :

பதிவு:2025-04-12 11:29:22

திருவள்ளூர் அடுத்த திரூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக கட்டாததால் பொதுமக்கள் அவதி :

திருவள்ளூர் அடுத்த திரூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக கட்டாததால் பொதுமக்கள் அவதி :

திருவள்ளூர் ஏப் 12 : திருவள்ளூர் அடுத்த திரூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டி கட்டி நீண்ட நாள் ஆனதால் பழுதடைந்து காணப்பட்டது. இதனை அடுத்து நீர்த்தேக்க தொட்டியை மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று இடித்து அகற்றப்பட்டது.

இதனால் போர் மூலம் நேரடியாக குடியிருப்பு வாசிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் வரும் நீரானது கலங்கலாக உள்ளதாகவும், ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே தண்ணீர் வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பைப் மூலம் செல்லும் நீர் வெளியேறி தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.