பதிவு:2025-04-19 10:52:22
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் :
திருவள்ளூர் ஏப் 19 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து முதலமைச்சர் பொன்னேரியில் நடந்து சென்று, சாலையின் இரு புறமும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதன்படி ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 194 கோடியே 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆவடி மாநகராட்சி கட்டிடம் 8 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி கட்டிடம் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பேரூராட்சி கட்டிடம் 2 கோடியே 89 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை விற்பனை மற்ரும் வேளாண் வணிகத்துறை கட்டிடம் 15 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறை சார்பில் 5 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொசஸ்தலையாறு சார்பில் 45 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 கோடியே 97 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 4 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 3 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நில எடுப்பு-1 நெடுஞ்சாலைகள் துறை சார்பில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பொதுப்புணித்துறைசார்பில் 55 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 1 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 418 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் 390 கோடியே 74 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லையும் முதல்வர் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்படி ஊரக வளரச்சி முகமை சார்பில் 258 கோடியே 27 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆவடி மாநகராட்சி 62 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி சார்பில் 47 கோடியே 79 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுகாதார்துறை சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) சார்பில் 15 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 390 கோடியே 74 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 63,124 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பட்டாக்கள், முதலமைச்சரின் விபத்து நிவாரண திட்டத்தில் உதவிகள், ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள், பழங்குடியினர் சான்றிதழ்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 30,202 பயனாளிகள் பயன்பெறும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழு வங்கிக் கடன்கள், ஐஸ் பெட்டிகள், வட்டார வணிக வள மையம், சமுதாய முதலீட்டு நிதி, நலிவுற்றோர் நல நிதி ஆகிய திட்டத்தில் நிதியுதவி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1000 பயனாளிகளுக்கு பசுந்தாள் விதைகள் விநியோகம், தெளிப்பான்கள் விநியோகம் போன்ற திட்டங்களில் உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 200 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள், சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்குதல், கூட்டுறவுத் துறை சார்பில் 3208 பயனாளிகளுக்கு கடன் உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 32,636 பயனாளிகள் பயன்பெறும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், முஸ்லீம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு தொழில் தொடங்கிட உதவிகள், கிறித்துவ உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் அடையாள அட்டைகள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 56,426 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலவாரிய அட்டைகள் வழங்குதல், பெண் கல்வி ஊக்கத்தொகை, இலவச தையல் இயந்திரங்கள், பழங்குடியின பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1432 பயனாளிகள் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், காதொலி கருவிகள், உயர் ஆதரவு தேவையுடைய பாதுகாவலருக்கு உதவித்தொகை, பராமரிப்பு உதவித் தொகை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 1471 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 357 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜெகத்ரட்சகன், சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ. கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், எஸ். சந்திரன், வி.ஜி. ராஜேந்திரன்,ஆ. கிருஷ்ணசாமி, கே. கணபதி, எஸ். சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.