பதிவு:2025-04-19 10:56:02
விடையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ கந்தசாமி ஸ்ரீ கங்கையம்மன் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய மகா கும்பாபிஷேகம் :
திருவள்ளூர் ஏப் 19 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விடையூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம். கந்தசாமி முருகர் ஆலயம். ஸ்ரீ கங்கையம்மன் ஆலயம். ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம். ஆகிய தனித்தனியே அமைக்கப்பட்ட கோவில்களுக்கு சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கடந்த 14ஆம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்டு 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம். நடைபெற்றது.
பதினாறாம் தேதி புதன்கிழமை புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் பூஜையும், கோ பூஜை தீர்த்த சந்திரகணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை நான்காம் கால பூஜையுடன் பிரதான கலசங்கள் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ கந்தசாமி முருகர் ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகிய கோவில்களில் கலசங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அப்பொழுது ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ என் மணி சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி,மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி உட்பட விடையூர், ராமன் கோயில், மேல்விலாகம், மணவூர்,கடம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.