வெள்ளவேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய பதுங்கியிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைப்பு :

பதிவு:2025-04-19 10:58:32

திருவள்ளூர் ஏப் 19 : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் பிரபல ரவுடி எபினேசர் என்பவர் கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய சிலரை தீர்த்துக் கட்டுவதற்கு சிலர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக வெள்ளவேடு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து வெள்ளவேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த கோலப்பன் சேரி ஏரிக்கரை பகுதியில் கடந்த 15ஆம் தேதி பதுங்கி இருந்த திருமழிசையை சேர்ந்த அரிகரசுதன்(24), கிருபாகரன்(22), உன்னி(என்ற) லோகேஸ்வரன் (24), ஆகிய மூன்று பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடமிருந்து ஆறு நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த ஆண்டு முன்பு எபினேசர் என்பவர் கொலை செய்யப்பட்டதாகவும் அதற்கு பழி தீர்க்கும் வகையில் திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த அன்பு உள்பட சிலரை தீர்த்துக்கட்ட இங்கு பதுங்கி திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அரிகரசுதன்(24), கிருபாகரன்(22), உன்னி(என்ற) லோகேஸ்வரன் (24), ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர்.

அதன்படி தப்பியோடிய 5 பேரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவியரசு என்பவனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீபெரும்புதுாரில் பதுங்கியிருந்த திருமழிசை பிரையாம்பத்து கிராமத்தைச் சேர்ந்த ராமு,(22), உடையார் கோவில் வில்லியம்ஸ்(24), பழனி, (24), திவாகர், (27) ஆகிய நான்கு பேரை கைது செய்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் ஐந்து பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.