பதிவு:2025-04-30 11:06:21
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் வழக்கறிஞர் கே. விஜயகாந்த் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 30 : அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வழக்கறிஞர் கே. விஜயகாந்த் ஏற்பட்டில் மணவாள நகரில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
தர்பூசணி, நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், மோர், திராட்சை பழ ஜூஸ், முலாம் பழ ஜூஸ், ரஸ்னா ஆகியவற்றை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனைவரும் அனைத்து வகையான பழ ஜூஸ்களையும் வாங்கி அருந்தி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே. சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.பி.எம். எழிலரசன், மாவட்ட அவைத் தலைவர் இ. இன்பநாதன், ஒன்றிய அவைத்தலைவர் சிற்றம் ஜெ.சீனிவாசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எம். ஜி.பட்டாபி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் தமீன்பாய்,முன்னாள் வலசை ஊராட்சி கழக செயலாளர் எம்.ஜெயராமன், முன்னாள் கொப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் போளிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பி.மணி, நிர்வாகிகள் ஆயில் சீனிவாசன், எம். ஜி.பி. சதீஷ்குமார், ஆர்.முரளி, அம்மா சுரேஷ், ஆர்.பாபு, முனிகிருஷ்ணன், ரமாதேவி, ரேகா, சாய்பவன், லோகேஷ், எம்.ராமு, எம். லட்சுமணன், கம்மவார் பாளையம் சீனிவாசன், சரத்குமார், டி.பி. குமார், அதிசயம், வாசுதேவன், கிளைக் கழக செயலாளர்கள் எஸ். கண்ணதாசன், பைட்டர் முகமது அலி, சேஷய்யா, ஆர்.மணி, கே. பழனி, தாமோதரன், கபிலர் நகர் வெங்கடேசன், எம் ஜி ஆர் நகர் சிவா, எஸ்.சதீஷ் பி.ஏழுமலை, என்.எல்.சேகர், கே. பாலகிருஷ்ணன், எஸ். கோதண்டன், எஸ். சந்திரகுமார், பி.கிரண் குமார், பி.பாலமுருகன், ஏ.நாகராஜ், ஏ. ஏழுமலை, ஆர்.கிருஷ்ணவேணி, எம்.ஜி. ராமச்சந்திரன், வினோத்குமார், மணிமாறன், பார்த்திபன், கார்த்திக், மதன், குமார், லட்சுமணன், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.