திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் : 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பேச்சு :

பதிவு:2025-05-02 11:46:12

திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர் வி.குப்புசாமி வரவேற்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் கே.சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், நகர செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அதிமுக மருத்துவ அணி செயலாளரும் முன்னாள் எம்பியுமான பி. வேணுகோபால், தலைமை கழக பேச்சாளர்கள் கே. ஏ.கே.முகில் எழில், கே.ஏ.ஏழுமலை , நெல்லையப்பன் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்கள் தினத்தை பற்றியும் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்களையும் எடுத்துரைத்தனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடந்த காலங்களில் அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களையும், எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து செயல்படுத்திய திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பேசும்போது தெரிவித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவர் ஜே.த. கவிச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், நிர்வாகிகள் கே.பி.எம். எழிலரசன், எஸ்.எ. நேசன், ஜோதி, விஜயகாந்த், குமரேசன், வழக்கறிஞர் பிரிவு சந்திரசேகர், நகராட்சி கவுன்சிலர்கள், செந்தில்குமார், சித்ரா விஸ்வநாதன் சுமித்ரா வெங்கடேசன் உட்பட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.