பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருகோவிலை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2025-05-16 11:37:18

திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருகோவிலினை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், பக்தர்கள் வரிசை மண்டபம், பக்தர்கள் ஓய்வகம், அன்னதான கூடத்துடன் கூடிய திருமண மண்டபம் , குளியலறை வளாகம் போன்ற திட்டப்பணிகள் ரூ. 159.23 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரை வழங்கினார்.

இத்திருக்கோயில் மூலம் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வடக்கு புறத்தில் உள்ள நிலத்தில் திருக்கோயிலின் எதிர்கால வளர்ச்சி பணிகளுக்கான கொள்முதல் செய்யப்பட உள்ள நிலத்திற்கான இணைப்பு சாலையாக ஏற்படுத்திட மாற்று ஏற்பாடுகள் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.

மேற்படி ஆய்வில் திருக்கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், மதிவாணன், எல்லாபுரம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், உதவி செயற் பொறியாளர், நரசிம்மன், எல்லாபுரம், வட்டாச்சியர் (ஆலய நிலங்கள்),கண்ணன் இந்து சமய அறநிலையத்துறை,அஞ்சன் லோகமித்ரா, பரம்பரை அறங்காவலர், முருகன், திருக்கோயில் செயற்பொறியாளர், திருவளர். ஜிஆர்எம் நிறுவனம், ஒப்பந்ததாரர், கலைச்செல்வி, கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் கலந்து கொண்டனர்.