திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் :

பதிவு:2025-05-16 11:39:13

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் :

திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 0 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பிறப்பு பதிவு விவரங்களை மாவட்ட சுகாதார நலப்பணிகள் அலுவலகத்தின் மூலம் பெற்று அக்குழந்தைகளுக்கான ஆதார் பதிவுகள் கட்டாயம் மேற்கொள்ளப்படவேண்டும். மேலும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் , 5 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் ஆதார் பதிவுகள் பள்ளிக்கல்வி துறை மூலம் மேற்கொள்வதை உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறிப்பிட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களை அமைத்து, ஆதார் அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான புதிய ஆதார் பதிவுகள் குறித்த விவரங்களை நேரடியாக விசாரணை செய்து குறிப்பான அறிக்கையினை தயார் செய்து TN State portal-லில் பதிவு செய்யப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் தெரிவித்தார்.