திருமணமாகாத இளைஞரை தன் வசப்படுத்திய பெண் : 2 திருமணங்கள் செய்து மறைத்தது அம்பலம் : போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது தூக்கு மாட்டிக் கொள்வதாக வீட்டிற்குள் ஓடியதால் பரபரப்பு :

பதிவு:2025-05-16 11:41:54



திருமணமாகாத இளைஞரை தன் வசப்படுத்திய பெண் : 2 திருமணங்கள் செய்து மறைத்தது அம்பலம் : போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது தூக்கு மாட்டிக் கொள்வதாக வீட்டிற்குள் ஓடியதால் பரபரப்பு :

திருமணமாகாத இளைஞரை தன் வசப்படுத்திய பெண் : 2 திருமணங்கள் செய்து மறைத்தது அம்பலம் : போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது  தூக்கு மாட்டிக் கொள்வதாக வீட்டிற்குள் ஓடியதால் பரபரப்பு :

திருவள்ளூர் மே 16 : சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் துர்கா தேவி. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன். இவர்கள் இருவரும் அண்ணாநகர் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இதில் பார்த்திபன் மேலாளராகவும் துர்கா தேவி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார்.துர்கா தேவிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணம் ஆகி 7 வயது பெண் குழந்தையும் 9 வயதில் ஆண் குழந்தையும் உள்ள நிலையில் துர்கா தேவியின் முதல் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் துர்கா தேவிக்கு வேறொருவனுடன் தொடர்பு ஏற்பட்டு அவரும் துர்கா தேவியை விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதனிடையே துர்கா தேவிக்கும் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அடிக்கடி இருவரும் சந்தித்து பேசிக் கொண்ட நிலையில் தனிமையிலும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து துர்கா தேவி கர்ப்பமானதால் ராயபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி துர்கா தேவி புகார் அளித்து இருவருக்கும் சமாதான பேச்சுவார்த்தை செய்து வைத்த நிலையில் துர்கா தேவி ஒரு சில உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவிலில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காசிமேடு பகுதியிலேயே தங்கி குடும்பம் நடத்தி அடிக்கடி வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார் பார்த்திபன். ஆனால் துர்கா தேவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துர்கா தேவியின் தொலைபேசியையும் கால் ரெக்கார்ட்டில் போட்டு கண்காணித்துள்ளார்.துர்கா தேவி அப்பகுதியில் உள்ள நபர்களிடம் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பார்த்திபன் துர்கா தேவியை விட்டுவிட்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து துர்கா தேவி நேற்று மாலை வேப்பம்பட்டில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு வழக்கறிஞர்களுடன் வந்து பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளார். தகவல் அறிந்து வந்த பார்த்திபனின் தாயார், மகன் பார்த்திபனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனால் எனக்கு ஒரு ரூபாய் கூட பிரயோஜனம் இல்லை. என் வீட்டை விட்டு வெளியேறு என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து பார்த்திபன் தாயார் தரப்பிலும் ஒரு சில வழக்கறிஞர்கள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் துர்கா தேவியின் தரப்பில் வந்த ஒரு சிலர் பார்த்திபனின் தாயாரை தாக்கி வெளியே தள்ளினர்.

பார்த்திபனால் 4 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் தான் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் தற்போது தனது கணவன் வீட்டிற்கு வந்துள்ளதால் தன்னை கொடுமைப்படுத்தி வெளியே அனுப்புவதாக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தன்னுடன் மூன்று ஆண்டுகள் அனைத்தும் தெரிந்து வாழ்ந்து தனது கருக்கலைப்புக்கு காரணமான பார்த்திபனுடன் தான் வாழ்வேன். என்னை இங்கிருந்து யாராவது அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதால் காவல்துறையினர் ஏதும் செய்வதறியாது தவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பார்த்திபனை உடனடியாக சம்பவ இடத்திற்கு வடசொன்னைதால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்தார்.பார்த்திபன் வந்தவுடன் துர்கா தேவி ஓடி சென்று இவர்தான் எனது கணவர். இவர் என்னுடன் வாழ விருப்பம் இல்லை என தெரிவிக்கிறார். பார்த்திபன் அப்பெண்ணின் கையை உதறிவிட்டு தூரமாக போய் நின்றார்.மீண்டும் துர்கா தேவி பார்த்திபன் அருகே நின்று கொண்டு நடந்தவற்றை தெரிவித்தார். பார்த்திபனோ துர்கா தேவிக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. என்னை ஏமாற்றி விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டு கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தியதாக கூறினார்.

இரண்டு திருமணங்கள் செய்த சம்பவத்தை பார்த்திபன் கூறும் போதெல்லாம் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த சம்பவத்தை கூற விடாமலேயே தடுத்து நிறுத்திய துர்கா தேவியால் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ஒரு கட்டத்திற்கு மேல் நான் செத்து விடுகிறேன் என திடீரென பார்த்திபன் வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டு கொண்டதால் போலீசார் அதிர்ச்சடைந்தனர். பின்னாலே ஓடிச் சென்று ஜன்னல் வழியே பார்த்த நிலையில் படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையை கட்டிக் கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அலறி அடித்து சினிமா படத்தில் வரும் காட்சியைப் போல் வெளிக்கதவு மற்றும் உள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற நிலையில் புடவையின் அருகிலேயே எந்த பதற்றமும் இல்லாமல் காவல்துறையினரை கண்டவுடன் அலறி கூச்சலிட்ட துர்கா தேவியால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து இருவரையும் சிறிது நேரம் அறைக்குள்ளேயே பேச விட்ட நிலையில் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். ஒரு கட்டம் வரை பொறுத்திருந்து பார்த்த காவல்துறையினர் இதற்கு மேல் நம்மால் முடியாது என்பது போல் இருவரும் கிளம்பி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று உங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.