திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பி.எச்.டி.எம் இயந்திரங்களை மானியத்தில் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-06-11 12:44:30



திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பி.எச்.டி.எம் இயந்திரங்களை மானியத்தில் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பி.எச்.டி.எம்  இயந்திரங்களை மானியத்தில் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் ஜூன் 11 : தமிழக அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயந்திரங்கள் 40 சதவிகித மானியத்தில் செயல்படுத்தி வருகின்றது. எண்ணெய் பிரித்தெடுக்கும் செக்கு ஒன்றுக்கு மானியமாக ரூ.1 இலட்சத்து 23 ஆயிரம், சிறிய வகை நெல் அரவை இயந்திரம் ஒன்றுக்கு மானியமாக 24 ஆயிரம், அரவை இயந்திரம் ஒன்றுக்கு மானியமாக ரூ.56 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொதுப் பிரிவினருக்கு பி.எச்.டி.எம் எண்ணெய் பிரித்தெடுக்கும் செக்கு இயந்திரம்,6 எண்கள் இலக்கு எண்ணிக்கை 40 சதவிகித மானிய தொகை ரூ.7.40 லட்சத்திலும்,சிறிய வகை நெல் அரவை இயந்திரம் 2 எண்கள் இலக்கு 0.48 லட்சத்திலும்,அரவை இயந்திரம் 2 எண்கள் இலக்கு 1.12 லட்சத்தில் என மொத்தம் 10 எண்கள் இலக்கு 9 லட்சத்தில் இலக்கு பெறப்பட்டுள்ளது. ஆதிதிராவிட பழங்குடியின பிரிவினருக்கு பி.எச்.டி.எம் எண்ணெய் பிரித்தெடுக்கும் செக்கு இயந்திரம்,1 எண்கள் இலக்கு எண்ணிக்கை 40 சதவிகித மானிய தொகை ரூ.1.21 லட்சத்தில் இலக்கு பெறப்பட்டுள்ளது.

விவசாயிகள் பி.எச்.டி.எம் இயந்திரங்களை மானியத்தில் பெற அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் (வே.பொ.)களை அணுகி பயன்பெறலாம்.மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.