கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 7 மாத கர்ப்பிணியாக விட்டுச் சென்ற இளைஞர் மீது மகளிர் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் புகார் :

பதிவு:2025-05-16 11:46:51



கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 7 மாத கர்ப்பிணியாக விட்டுச் சென்ற இளைஞர் மீது மகளிர் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் புகார் :

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 7 மாத கர்ப்பிணியாக விட்டுச் சென்ற இளைஞர் மீது மகளிர் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் புகார் :

திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் அருகே குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா (32). இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.இவருக்கு 10 வயது ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் காவியாவின் கணவர் பாலகிருஷ்ணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற திருமணமாகாத இளைஞர் காவியாவுடன் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் காவியாவை தான் திருமணம் செய்து கொள்வதாகவும் தான் அரசு வேலை செய்வதால் நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் எனவும் ஆசை வார்த்தைகள் கூறி அப்பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் அப்பெண்ணெய் சென்னை வியாசர்பாடி பகுதியில் ரவீந்திரன் வீடு பார்த்து வைத்து அப்பெண்ணுடன் ஒன்றாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காவியாவிற்கு தெரியாமல் வேறொரு பெண்ணை ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவியாவிற்கு தெரிந்து கேட்கவே தான் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் நான் உன்னை வாழ வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பழகி வந்த காவியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ஆனால் காவியா வயிற்றில் உள்ள ஏழு மாத குழந்தைக்கு சம்பந்தமில்லை என ரவீந்திரன் கூறி நிராகரித்து வந்துள்ளார். இதையடுத்து மாவட்ட அலுவலகத்தில் காவியா புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.டி என் ஏ டெஸ்ட் எடுக்கவும் தனக்கு சம்மதம் என்றும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வியாசர்பாடியில் உள்ள வீட்டிற்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவியா கூறியதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.