பதிவு:2025-05-16 11:49:41
பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளில் நகை பணம் திருடி தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு :
திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த திம்மபூபாலபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன். இவர் குடும்பம் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ந் தேதி ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளனர், மீண்டும் 13 ந் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 16 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்,.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்திருந்தனர்,அதேபோன்று ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமனின் தனது பேரக் குழந்தைகளும் உடல்நிலை சரியில்லாத சென்றதால் கடந்த மார்ச் 17_ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற சென்றுள்ளார்.இரவு ஆனதால் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களுடைய இன்னொரு வீட்டில் தங்கியுள்ளனர்
18 ந் தேதி அன்று காலை வழக்கமாக வீட்டு வேலை செய்யும் தரணி என்பவர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளார். வீட்டின் உரிமையாளர் வெள்ளி நகை 7 சவரன் 60,000 ரொக்க பணம் என கொள்ளை போனது உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் ஆனது அளித்திருந்தார்.இந்த இரண்டு வழக்குகளும் பெ.பேட்டை காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட சம்பவம் என்பதால் போலீசார் குற்றவாளிகளை இரண்டு வழக்கிலும் தேடி வந்திருந்தனர்,
இந்நிலையில் திருத்தணி அடுத்த ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட வந்த ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்காக்கர் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்த சுதான்-27 அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி-22 மனோ என்ற மனு -19 உள்ளிட்ட ஆறு பேரை ஆர் கே பேட்டை போலீசார் கடந்த மார்ச் 27 ந் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 26 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த குற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மனோ என்ற மனு என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்ம பூபாலபுரம் மற்றும் போந்தவாக்கம் பகுதியிலும்... நண்பர்களுடன் இணைந்து கைவரிசை . காட்டியதை ஒப்புக்கொண்டார்
இதனால் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பாராஞ்சி பகுதியைச் மனோவின் கூட்டாளிகளான விஜய் -25 சென்னை கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாஷ்-25 என்பவரை ஊத்துக்கோட்டை உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில்
அவர்களின் செல் போன் சிக்னல் வைத்து கைது செய்து விஜய் வீட்டில் பதுக்கி வைத்திருந்த உருக்கிய 15 சவரன் தங்க நகைகளைபறிமுதல் செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்ஜி புழல் சிறையில் அடைத்திருந்தனர். மேலும் இவ் வழக்கில் ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் திருத்தணி கிளைச் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வெளிய வந்த மனோ என்ற மனுவையும் போலீசார் சிறை வளாகத்தில் வைத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்திருந்தனர்
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சுதான் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி இருவரை தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
இரண்டு வீடுகளில் கைவரிசை இரண்டு வீடுகளில் நகை பணம் திருடி தலைமறைவாக இருந்து வந்த மூன்று குற்றவாளிகளை 6 மாதங்கள் பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,