பதிவு:2025-05-16 11:55:13
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 87.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் : 2 அரசு பள்ளிகள் உட்பட 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி :
திருவள்ளூர் மே 16 : பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.20 மணி அளவில் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 248 பள்ளிகளை உள்ளடக்கிய 109 தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்கள் 13903 மற்றும் மாணவிகள் 15331 ஆக மொத்தம் 29234 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 மாணவர்கள் 11479 பேர், மாணவிகள் 14068 பேர் மொத்தம் 25547 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 82.56 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 91.76 சதவீதம் தேர்ச்சியும் ஆக மொத்தம் 87.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநில அளவில் 36-வது இடம் பிடித்துள்ளது, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 85.54% தேர்ச்சி சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட 1.85 சதவீதம் கூடுதலாக மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
2024-2025-ஆம் கல்வியாண்டில் 102 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6464, மாணவிகள் 7673 ஆக மொத்தம் 14137 தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 4541 மற்றும் மாணவிகள் 6646 ஆக மொத்தம் 11187 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 70.25 சதவீதம் மாணவிகள் 86.62 சதவீதம். ஆக மொத்தம் 79.13 சதவீதம் ஆகும். 2023-2024 ஆம் கல்வியாண்டில் 75.50 சதவீதம் தேர்ச்சி ஆகும்.கடந்த ஆண்டை விட 3.63 சதவீதம் கூடுதலாக மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வருவாய் மாவட்ட அளவில் 2 அரசு பள்ளிகள் உட்பட 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.