பதிவு:2025-05-27 10:58:57
பெரு நிறுவனம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து கீழ்நல்லாத்தூர் ஏரியினை தூர்வாரும் பணி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் ஏரியினை பெரு நிறுவனம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தூர்வாரும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்நல்லாத்தூர் ஏரியினை பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து தூர்வாரும் பணியினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏரியினை ஒரு மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரி அதன் மண்களை கொண்டு கரையை பலப்படுத்த உள்ளது. மேலும், ஏரியில் உள்ள வேற்று தாவரங்களை அளிக்கப்பட்டு ஏரியை தூய்மைப்படுத்தப்படும். மூன்று இடங்களில் நீர் சுரக்கும் தொட்டி மூன்று மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்படும். பறவை மற்றும் பிற உயிரினங்கள் முட்டை இடும் வகையில் பல் உயிரின பெருக்கத்திற்காக வசதிகள் ஏற்படுத்த உள்ளன. ஏரியினை சட்டரீதியான அளவில் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சௌந்தரி, செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பெரு நிறுவன அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.