பதிவு:2025-05-27 11:00:49
திருவள்ளூர் நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்பட்ட பொருட்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங் பார்வையிட்டார் :
திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங் பார்வையிட்டார்.
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவதை பார்வையிட்டு அதன் செயல் திட்டங்களை கேட்டறிந்து விற்பனையை அதிகப்படுத்துவதற்கான கவர்ச்சிகரமாகவும் மற்றும் அதிகமான விளம்பரம் செய்ய வேண்டும். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்படும் பொருட்களை பேக்கிங் செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு அதன் செயல் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.இதில் மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.