பதிவு:2025-05-27 11:05:44
அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கேட்டு கஞ்சா போதையில் அனைவரிடமும் தகராறு செய்வதாக போலீசில் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டரிடம் பெண்கள் புகார் :
திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சியில் நரிக்குறவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆஷா என்றவரின் கணவர் ஜோதிராஜ் என்பவர் ஷீலா என்பவரிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 20000 கடனாக வாங்கி உள்ளார்.
இந்நிலையில் ஆஷாவின் கணவர் ஜோதி ராஜ் மனைவி வீட்டு பிரிந்து சென்ற நிலையில் தற்போது ஷீலா என்பவர் கொடுத்த கடனை கேட்டு ஆஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஷீலா என்பவர் கஞ்சா போதையில் இருக்கும் இளைஞர்களை துணைக்கு அழைத்து வந்து நரிக்குறவர் காலனியில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் கடம்பத்தூர் காவல் நிலையத்திலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி இடமும் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஷீலாவின் ஆதரவாளர்கள் மீண்டும் தங்களிடம் கஞ்சா போதையில் தகராறு செய்வதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், நரிக்குறவர் காலணியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்திடக்கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவினர் பெண்கள் புகார் மனு அளித்தனர்.