திருவள்ளூர் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு 30 சவரன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 88 முறை நடையாய் நடந்தும் நடவடிக்கை இல்லை என கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர் கண்ணீர் மல்க புகார் :

பதிவு:2025-05-27 11:08:32

திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (49) ஓட்டுநரான இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் மகனுக்கு திருமணமான நிலையில் மகளுக்காக சிறுக சிறுக ஒரு கிராம் 2 கிராம் என கிட்டத்தட்ட 30 சவரன் நகை சேமித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பச்சையப்பன் ஆவடி டாங்க்ஃபாக்டரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொள்ளைச் சம்பவம் நடந்த நாளிலிருந்து இதுவரை ஆவடி டாங்க் ஃபாக்டரி காவல் நிலையத்திற்கும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் இதுவரை 88 முறை நடையாய் நடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலைக்கழித்து வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பச்சையப்பன் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தார்.மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்த 30 சவரன் தங்க நகையை மீசை தர காவல்துறைக்கு உத்தரவிடப்படும் என கலெக்டர் தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.