பதிவு:2025-05-28 11:42:52
பேரம்பாக்கம் அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாய்ந்த உயர் மின்னழுத்த கம்பம் : புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் வேதனை :
திருவள்ளூர் மே 28 : திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் ஊராட்சியில் இருந்து காவாங்களத்தூர் செல்லும் வழியில் சந்திரசேகர முதலியார் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.தற்பொழுது நெல் நடவு பணி நடந்து முடிந்த நிலையில் 15 தினங்களுக்கு முன்பு அடித்த காற்றில் உயர் மின்னழுத்த கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மின்சாரத் துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாகவும் களை எடுக்க முடியாமல் நெற்பயிர் வீணாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மின்சார ஒயர்கள் கையில் பிடிக்கும் அளவிற்கு கீழே இருப்பதினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.