பதிவு:2022-06-14 21:09:04
திருவள்ளூர் அருகே திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் : பெண்களுக்கு 50 சதவிகிதம் அரசியல் அதிகாரம் பெற்றுத் தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு
திருவள்ளூர் ஜூன் 14 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஊராட்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் புஜ்ஜி.டி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லாகான், திருவள்ளூர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ராஜராஜன், மாவட்ட குழு உறுப்பினர் டி.தென்னவன், நிர்வாகிகள் இந்திரா பொன் குணசேகர், வி.என்.சிற்றரசு, கே.தரணி, பி.மதுரைவீரன், கே.விமலாகுமார், பி.ராமானுஜம், பி,கே.இ.கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர்கள் எஸ்.வேலு, எல்.சரத்பாபு, ஏ.அன்பழகன், கே.நாகராஜ் பி.ரவிச்சந்திரன் பி.பிரசாத், டி.பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழக பால்வளத்துறை அமைசச்ரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி சிறப்புரையாற்றினர்.
இதில் தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசும் போது, தமிழகத்தில் கடந்த காலங்களில் இருந்த கை ரிக்சாவை ஒழித்து மனித நேய தலைவராக திகழ்ந்தவர் கலைஞர் என்றும், காவலர்கள் கஞ்சி போட்ட அரை கால் டவுசர் மற்றும் சட்டை அணிந்து இருந்ததை மாற்றி பேண்ட். மற்றும் கம்பீரமான சட்டை அணிய வழி வகுத்தவர் கலைஞர் என்றும்,. சொத்துரிமையில் பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், கல்விக்காகவும் நல்ல பல திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும், பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிப்பால் பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பாதகவும் , பெண்களும் அரசியலில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைத்து 50 சதவிகிதம் உரிமை பெற்றுத் தந்தவர் தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எனவும் திண்டுக்கல் ஐ.லியோனி பேசும் போது தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஐ.லியோனி ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலையையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சி.ஜெரால்டு, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு மற்றும் ஒன்றிய நகர பேருர் கழக செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், எம்.ஜெயக்குமார், தங்கம் முரளி, ஜி.ராஜேந்திரன், பேபி .சேகர், ஜி.நாராயணபிரசாத்,பொன்.விஜயன், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, ஜி.ஆர். திருமலை, தி.வே.முனுசாமி ஆகியோரும், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்களான பிரபு கஜேந்திரன், எஸ்.மூர்த்தி, ஜெய புகழேந்தி, ஏ.ஜெ.பவுல், ஏ.ஜி.ரவி, ஓ.ஆர்.நாகூர் கனி, காஞ்சனா சுதாகர், யு.வடிவேல், க.ஸ்ரீதரன், பரமேஸ்வரி கந்தன், ஆர்.உஷா ராணி, பி.எஸ்.கமலேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கவுன்சிலரும் கிளை பிரதிநிதியுமான தம்பா என்கிற எஸ்.சதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.