பதிவு:2025-07-17 21:46:08
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இரண்டு புதிய கட்டடப் பணிகள் : அமைச்சர் சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் அடிக்கல் வைத்து பணிகளை துவக்கி வைத்தனர் :
திருவள்ளூர் ஜூலை 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அப்புறம் பொதுப்பணித்துறை சார்பாக ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை கட்டடப் பணிகளையும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டடப் பணிகளையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் அடிக்கல் வைத்து பணிகளை துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்துட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையின் பின்புறத்தில் பொதுப்பணித்துறை சார்பாக புதிய சுற்றுலா மாளிகை கட்டம்பணிகள் அரசாணை நிலையம் 15-படி ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில், மொத்தம் 4745.16 சதுர அடி பரப்பில் மூன்று முக்கிய விருந்தினர்கள் அறைகளும், ஒரு கூட்ட அரங்கம், ஒரு ஓய்வறை, சமையலறை உடன் கூடிய சாப்பாட்டு அறை மற்றும் முகப்பு அறை கட்டப்படவுள்ளது.
பின்னர், இணை இயக்குனர் (வேளாண்மை) அலுவலகம் அருகில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டடம் கட்டும் பணிகள் அரசாணை நிலையம் 94-படி ரூபாய் 3.33 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 8503.84 ச.அடி பரப்பில் உதவி இயக்குநர் அறை, 2 துணை இயக்குநர் அறைகள், நிர்வாக அறை, பதிவு அறை மற்றும் முகப்பு அறைகளும். மேலும் முதல் தளத்தில் தொழில்நுட்ப பிரிவு 1, தொழில்நுட்ப பிரிவு 2, கலந்தாய்வு அரங்கம், பதிவு அறை மற்றும் கிடங்கு ஆகியவை கட்டப்படவுள்ளது.
இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், உதவி செய்யப் பொறியாளர் மனோகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.