பதிவு:2025-07-17 21:52:08
திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்ட தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது :
திருவள்ளூர் ஜூலை 17 : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 டீசல் டேங்கர்கள் எரிந்து நாசமானது, இதனால் தண்டவாளங்கள், மின் ஒயர்கள் சேதமடைந்து சீரமைக்கப்பட்டு ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது .
அப்பகுதியில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்துக்கு ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரிகள் தெரியவந்தது குறித்து மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் அதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் கடம்பத்தூர் முதல் திருவள்ளூர் ரயில் நிலையம் வரை அனைத்து ரயில்களும் அடுத்த சில தினங்களுக்கு அப்பகுதியில் 20 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலில் இயக்க தென்னக ரயில்வே அறிவுறுத்தியுள்ளது , அப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு சரி செய்த தண்டவாளத்தை கண்காணிக்கும் வகையில் சோலாரில் இயங்கக்கூடிய 5 வைஃபை அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.