திருவள்ளூரில் 19 ம் தேதி மாணவர் குறைதீர்ப்பு கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-07-17 21:54:54



திருவள்ளூரில் 19 ம் தேதி மாணவர் குறைதீர்ப்பு கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூரில் 19 ம் தேதி மாணவர் குறைதீர்ப்பு கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 17 : 2025-26ம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து மாணவ,மாணவியர்களின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உயர்கல்வி ஆலோசனை மைய கட்டுப்பாட்டு அறை (D Block அறை எண்.222) ல் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ள (9344410803, 7550057547) என்ற தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்கட்டுபாட்டு அறையினை தொடர்பு கொண்டு மாணவர்களின் உயர்கல்வி தொடர்வதை எளிமைபடுத்துவதற்காகவும், மாணவர்கள் சந்திக்கும் நிர்வாக சவால்களை மாவட்ட நிர்வாகம் களைந்து அனைவரும் உயர்கல்வி சேர்வதை உறுதிபடுத்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் 19.07.2025 அன்று 10 மணிக்கு மாணவர் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் போதிய சான்றிதழ்கள் இல்லாமை, குடும்ப மற்ற சமூக சூழல்கள் காரணமாக கல்லுாரி சேர்வதில் சிக்கல்களை சந்திக்கும் மாணவர்கள் மற்றும் உயர்கல்வி சேர்வதில் சவால்களை சந்திக்கும் மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் மாணவர் இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.