பதிவு:2025-07-18 11:09:51
திருவள்ளூர் மாவட்ட 23 வது காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா பொறுப்பு ஏற்பு :
திருவள்ளூர் ஜூலை 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் 23 வது காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா பதிவு ஏட்டில் கையொப்பம் இட்டு வியாழக்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 27 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சீனிவாச பெருமாள், மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேகானந்தா சுக்லா, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து உத்தரவிட்டது.இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட விவேகானந்தா சுக்லா அலுவலகத்திற்கு வருகை தந்து பதிவு ஏடுகளில் கையொப்பம் இட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அவரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் 23 ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.