பதிவு:2025-07-18 11:14:06
திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது அறுந்து கிடந்த இன்டர்நெட் வயர் வாகனத்தில் மாட்டி இழுக்கப்பட்டதால் மூதாட்டி நெத்தியில் பட்டு தூக்கி வீசப்பட்டார் : சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி :
திருவள்ளூர் ஜூலை 18 : திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் தெருவில் இன்டர்நெட் ஒயர் சாலையில் அறுந்து கிடந்துள்ளது. அந்த ஒயர் மேம்பாலத்தின் மீது சென்ற வாகனத்தில் சிக்கி திடீரென இழுக்கப்பட்டதால் மேம்பாலத்தின் கீழே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி குமாரி என்பவரின் கழுத்தில் எதிர்பாராமல் பட்டு தூக்கி வீசியதால் மூதாட்டி சம்பவ இடத்தில் சுருண்டு கீழே விழுந்துள்ளார்,
அந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இன்டர்நெட் வயர் தூக்கி அடித்ததில் சாலையில் விழுந்து மூதாட்டி தலையில் பலத்த காயமடைந்து பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,