பதிவு:2025-07-18 11:17:06
மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 18 : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கை, கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் மாற்றுத்திறனாளிகள், மிதமான அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டத்தினை விரிவுப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை (நிலை) எண்.11 நாள்.24.06.2025 படி 40 சதவீதத்திற்கு மேல் 18 வயது முதல் 60 வயது வரை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், பாதுகாவலர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் புற உலக சிந்தனையற்ற,மதி இறுக்கம் குறைபாடுடைய பெற்றோர், பாதுகாவலர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, UDID அட்டை, அரசு/அரசு உதவி பெறும் நிறுவனங்களில் அல்லது தனியார் நிறுவனங்களில் பெறப்பட்ட தையல் சான்று ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள இ சேவை மையத்தில் அல்லது திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாக 29.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.