திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2025-07-19 10:55:49



திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில்

திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாமினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாமில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பித்த அரை மணி நேரத்திற்குள்ளாக திருவள்ளூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்த காமேஷ் குமார் என்பவருக்கு பிறப்பு சான்றிதழை உடனடியாக வழங்கி, அதே திருவள்ளூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்த ரம்யா அவர்களின் மாமா வெங்கட்ராமன் என்பவரின் இறப்பு சான்றிதழும் உடனடியாக வழங்கினர்.

முகாமில் திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தாமோதரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.