பதிவு:2025-07-19 11:03:46
திருவள்ளூர் அடுத்த மப்பேடு சமத்துவபுரம் காந்தி நகர் பகுதியில் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதி :
திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அடுத்த சமத்துவபுரம் காந்தி நகர் பகுதியில் பல ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் சாலை அமைத்துத் தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்ததன் பேரில் 1200 சதுர மீட்டருக்கு காலை பணி துவங்கப்பட்டு சாலையில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளன.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் சாலை போடாததால் இறந்தவர்கள் உடலை அவ்வழியை எடுத்துச் செல்ல மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அந்த பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் உயிரிழந்தார். இவரை அடக்கம் செய்ய அவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல பாதை சரியில்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து மப்பேடு போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தினார். விரைந்து சாலை பணியை முடித்து தருவதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.