நெகிழிகளுக்கு பதிலாக மக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகங்கள், தெருவோர சிறு உணவு வணிகங்களுக்கு விருது : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-07-19 11:06:28



நெகிழிகளுக்கு பதிலாக மக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகங்கள், தெருவோர சிறு உணவு வணிகங்களுக்கு விருது : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

நெகிழிகளுக்கு பதிலாக மக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகங்கள், தெருவோர சிறு உணவு வணிகங்களுக்கு விருது : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 19 : நெகிழிகளுக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகங்கள் மற்றும் தெருவோர சிறு உணவு வணிகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிகளுக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை விநியோகிக்கும், பொட்டலமிடும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இதன் மூலம் இதர உணவு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அந்நிறுவணங்களை கண்டறிந்து தமிழ்நாடு அரசு விருது வழங்கவுள்ளது.

மிகச் சிறந்த பெரியவகை உணவு வணிகங்களுக்கு அதாவது வருடாந்திர விற்றுக் கொள்முதல் ரூ. 12 இலட்சத்திற்கு மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவுபாதுகாப்புத் துறையால் ரூ. 1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறுவணிகர்களுக்கு ரூ. 50000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும் அதற்கு விருப்ப முள்ளவர்கள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவ்விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் உள்ளடங்கிய மாவட்ட அளவிலான தேர்வு குழுவினர் பரிசீலனை செய்வதுடன்; மாவட்ட அளவிலான தேர்வுகுழு சம்பந்தப்பட்ட உணவகங்களை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கும்.

அதன் பின்னர், மாநில அளவிலான பரிசீலiனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கும். சிறந்த உணவகங்களுக்கான விருதில் பங்கேற்க விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்,பதிவுச் சான்றிதழ் பெற்று அது நடப்பில் இருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருநபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்து பணியார்களும் தொற்றுநோய் தாக்கமற்றவர்கள் என்பதற்கான மருத்துவச் சான்றினை 12 மாதத்திற்குள் புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகமானது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ழூலம் நடத்தப்படும் சுகாதாரத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தபட்ச அளவு கோலுடன் தேர்ச்சிபெற்றுசுகாதாரமதிப்பீட்டுச் சான்றினை உணவு பாதுகாப்புத் துறையின் சரிபார்ப்பு; பட்டியலின்படி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் முலம் அதிக ஆபத்துள்ள உணவு வணிக வகைகளுக்கான தணிக்கை மேற்கொண்டு அதில் 110 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தமது உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி உணவுபாதுகாப்பு, கழிவு மேலாண்மை நடைமுறைகள் மற்றும் நெகிழிகள் பயன்படுத்தாதை உறுதி படுத்தி தனது சுய அறிவிப்பு சரிபார்ப்பு பட்டியலினை வழங்க வேண்டும்.

எனவே, அனைத்து உணவு வணிகர்களும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்; துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிகள் ஆகியவற்றைத் தவிர்த்து மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை விநியோகிப்பது, பொட்டலமிடுவதன் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த உதவுவதுடன், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் விபரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தின் இரண்டாவது மாடியில் அறை எண் 218-ல் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.