திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-07-19 11:07:40

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்று, பள்ளியில் பயின்று வருவதற்கான சான்று வங்கிக் கணக்கு புத்தகம், UDID மற்றும்; ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்குமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.