பதிவு:2022-06-14 21:15:23
திருவள்ளூர் அடுத்த காவேரிராஜபுரம் கிராம மக்கள் சார்பில் இலவச வீட்டு மனை வழங்கக் கோரி அருந்ததியினர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு
திருவள்ளூர் ஜூன் 14 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராம மக்கள் சார்பில் தனியார் அமைப்பின் தலைவர் எம்.என்.பாலாஜி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில் காவேரிராஜபுரம் கிராமத்தில் உள்ள காலணியில் 250-க்கும் மேற்பட்ட அருந்ததியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் 2,3 குடும்பத்தினர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் தனியாக வாழ வீட்டுமனை இல்லாமல் 70- ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். எனவே இந்தக் காலனி மக்கள் நலன் கருதி, காவேரிராஜபுரம் கிராமத்திற்கு மேற்கே கொள்ளப்பள்ளி என்ற பங்காருகன் பள்ளி கிராமத்தில் அரசு அனாதீனம் நிலம் உள்ளது. அந்த நிலத்தை இந்த காலனி மக்களுக்கு பிரித்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நேரில் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.