பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ் வார்த்தல், மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டம் : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் :

பதிவு:2025-07-21 11:41:25



பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ் வார்த்தல், மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டம் : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் :

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ் வார்த்தல், மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டம் : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ் வார்த்தல் மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டம் : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பெருந்திட்ட வரைவின் கீழ் நடைபெற்று வரும் கியூ லைன் காம்ப்ளக்ஸ், பக்தர்கள் தங்குமிடம் அன்னதானக் கூடம் சுகாதார வளாகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகளை வழங்கி பேசினார்.

ஆடி மாதத்தில் 10 அம்மன் திருக்கோயில்களில் கூழ் வழங்குதல் மற்றும் 5 அம்மன் திருக்கோயிலில் ஒரு லட்சம் பெண் பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியபாளையத்தில் தொடங்கி வைத்துள்ளோம். பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலை பொறுத்த அளவில் ரூ. 76 கோடியில் பக்தர்கள் தங்குமிடம், ரூ. 22.50 கோடியில் வரிசை மண்டபம், ரூ. 25.50 கோடியில் அன்னதான கூடம் மற்றும் திருமண மண்டபம், ரூ. 7 கோடியில் சுகாதார வளாகம், ரூ. 21 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ. 6.34 கோடியில் மூன்றாம் பிரகாரம் மதில் சுவர் மற்றும் மண்டபம், ரூ. 10.43 கோடியில் ஏழு நிலை ராஜகோபுரம் ஒன்று, ஐந்து நிலை ராஜகோபுரம் மூன்றும், ரூ. 1.60 கோடியில் உபசன்னதிகள் திருப்பணிகள் என ரூ. 173.58 கோடி மதிப்பீட்டில் 10 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும், இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்காகவும், பக்தர்களின் போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் வசதிக்காகவும் சுமார் 6.76 ஏக்கர் இடம் நிலம் கையகப்படுத்திட பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.19 கோடி வழங்க இருக்கின்றோம். திருவிழா காலங்களில் சிறப்பு கட்டணம் ரத்து, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்குதல், அன்னதானத் திட்டத்தில் வடை மற்றும் பாயசம், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களில் கூழ் வழங்குதல் மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்குதல் என பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ. 7,727 கோடி மதிப்பிலான 7,863.08 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவினால் 12,842 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 11,842 திருக்கோயில்களில் ரூ.7,025 கோடி மதிப்பீட்டில் 26,994 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் உபயதாரர்கள் ரூ.1,416.43 கோடியிலான 11,176 திருப்பணிகளை செய்து தருகின்றனர். இந்த பணிகளில் ரூ.3,582 கோடி மதிப்பீட்டில் 13,807 பணிகள் நிறைவுற்றிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,வேலூர் மண்டல இணை ஆணையர் தி.அனிதா, துணை ஆணையர் சி.கருணாநிதி, உதவி ஆணையர் மு.சிவஞானம், பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, திருக்கோயில் செயல் அலுவலர் து.ரு.பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.