பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய் கரை சேதம் : பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு :

பதிவு:2025-07-23 12:33:21

திருவள்ளூர் ஜூலை 23 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி நீர்த்தேக்கம் ஆகும். கொசஸ்தலை ஆற்றின் நடுவில், பூண்டியில் நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீர், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணை நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால் நிரப்பப்பட்டு வருகிறது.

இங்கு சேகரமாகும் தண்ணீர், புழல் ஏரிக்கு பிரதான கால்வாய் வாயிலாகவும், சோழவரம் ஏரிக்கு ‘பேபி கால்வாய்’ வாயிலாகவும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் புழல் ஏரிக்கு செல்லும் பிரதான கால்வாய் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் புல்லரம்பாக்கம் ஈக்காடு தண்ணீர் குளம் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் மண் அரிப்பால் கரை பகுதி மிகுந்த சேதமடைந்துள்ளது.

ஆனால் ஓராண்டாகியும் நீர்வளத்துறையினர் சீரமைக்காததால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் மண் அரிப்பால் சேதமான கால்வாய் கரையை, நீர்வளத் துறையினர் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.