பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2025-07-25 11:20:19



பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் ஜூலை 25 : பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தேவந்தவாக்கம் ஊராட்சி செங்குன்றம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பி.எம்.ஜன்மன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் போந்தவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து பெருஞ்சேரி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும்,நெய்வேலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நாற்றகங்கல் பண்ணை அமைத்து மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பூண்டி ஊராட்சி ஒன்றியம், சிறுவானூர் கண்டிகை ஊராட்சி ஜே.ஜே.நகர்,எஸ்.ஜே.நகர் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள சாலை பணிகள் தொடர்பாகவும், பட்டரைபெரும்புதூர் ஊராட்சியில் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.